கொடுங்கையூரில் தமிழ் நாடு சமையல்கலை தொழிலாளர் சங்கம் சார்பில் திமுகவின் மறைந்த பேராசியர் க.அன்பழகன்அவர்கள் திருவுருவம் படம் திறப்பு விழா,புகழ்அஞ்சலி மற்றும் தமிழகத்தை அச்சறுத்தும் கொரோனா வைரஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சி பதாகைகள்,பலூன் பறக்கும்விடும் நிகழ்ச்சி சங்கத்தின் தலைவர்,எம்.ஜி.ராஜாமணி பொதுச்செயலாளர் இட்லி இனியவன் தலைமையில், சிறப்பு அழைப்பளர்கள்,திருவொற்றியூர் காலடிப்பேட்டை செல்வி கிளினிக் பிரபல ஆயுர்வேத மருத்துவர் ஜி.ராஜக்குமார்,கிளினிக்கின் பிஆர்ஒ எ.எம் கே.இரவிக்குமார்,மற்றும் சங்கத்தின் நிர்வாகிகள் கலந்துகொண்டார்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்திய விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற காவல்துறை அமைச்சுப்பணியாளர்களை தூத்துக்குடி எஸ்பி  பாராட்டினார்.

 

தூத்துக்குடி மாவட்ட அனைத்து அரசு பணியாளர்களுக்கிடையேயான தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் நடத்திய 2019-2020ம் ஆண்டுக்கான மாவட்ட அளவில் நடைபெற்ற   விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற காவல்துறை அமைச்சுப்பணியாளர்களை தூத்துக்குடி SPஅருண் பாலகோபாலன்,  பாராட்டினார்.

 

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வணிகவரித்துறை, வருவாய்த்துறை, நீதித்துரை, கல்வித்துறை, சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளில் பணியாற்றி வரும் அரசுப்பணியாளர்களுக்கிடையே 2019-2020ம் ஆண்டுக்கான விளையாட்டுப் போட்டி கடந்த 06.03.2020 அன்று தூத்துக்குடி தருவை மைதானத்தில் நடைபெற்றது. இந்த விளையாட்டுப்போட்டியில் சுமார் 500க்கும் மேற்பட்ட  அரசுப்பணியாளர்கள் கலந்து கொண்டனர். 

 

இந்த விளையாட்டுப்போட்டியில் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை அமைச்சுப்பணியாளர்கள் 400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்;திலும், உயரம் தாண்டுதல், ஒற்றையர் மற்றும் இரட்டையர் மேஜை பந்துப் போட்டி ஆகிய 4 விளையாட்டுக்களில் முதலிடத்தைப் பிடித்துள்ளனர். கபடி போட்டியில் இரண்டாமிடத்தைப் பிடித்து வெற்றி பெற்றுள்ளனர்.

 

400 மீட்டர் தொடர் ஓட்டப்பந்தயத்தில் காவல்துறை அமைச்சுப்பபணியாளர்கள்  மயில்குமார், சேர்மத்துரை, கதிரேசன் மற்றும் பெரியசாமி ராஜா ஆகியோரும், உயரம் தாண்டுதலில் செந்தில் விநாயகப்பெருமாளும், ஒற்றையர் மேஜை பந்துப் போட்டியில் குமார், இரட்டையர் மேஜை பந்துப் போட்டியில் குமார் மற்றும் ஆவுடையப்பன், கபாடி போட்டியில் கணேசபெருமாள், மேண்ட்லி, பாலகிருஷ்ணன், முனியசாமி, கோபிநாத், ராமஜெயம், ராஜபெருமாள், ராஜ்குமார் மற்றும் சிலர் கலந்து கொண்டனர்.

 

வெற்றி பெற்றவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  அருண் பாலகோபாலன்,  வாழ்த்து பெற்றனர்.

" alt="" aria-hidden="true" />

Popular posts
2ம் நாளாக சரிவில் தங்கம் விலை : சவரன் ரூ.248 குறைந்து ரூ.32,488-க்கு விற்பனை ; பெருமூச்சு விடும் நகை பிரியர்கள்
Image
வங்கி அதிகாரிகள் போல பேசி ரூ.3 கோடி மோசடி டெல்லியில் 3 பேரை தமிழக போலீசார் கைது செய்தனர்
Image
சென்னை நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் சிறந்த யோகா ஆசிரியர் கான கோல்டன் கிரௌன் விருது
Image
திண்டுக்கல் மாவட்ட ஊர்க்காவல் படையினர் அனைவருக்கும் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சக்திவேல் அவர்கள் கை சுத்திகரிப்பானை ( Hand Sanitizer) வழங்கினார்
Image
ரெயில்வே என்ஜினீயரிடம் ரூ.30 லட்சம் நிலத்தை அபகரித்தவர் கைது 2 பேருக்கு வலைவீச்சு
Image