வேலூரில் ஊரடங்கு உத்தரவு முடியும்வரை இறைச்சி கடைகளை திறப்பதில்லை என உறுதி ஏற்றனர்.
" alt="" aria-hidden="true" />
வேலூர் மாவட்டத்தில் உள்ள இறைச்சிக் கடை ஊரடங்கு முடியும்வரை திறப்பதில்லை என உறுதி ஏற்பு மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் தலைமையில் வேலூர் முழுவதும் உள்ள இறைச்சி வியாபாரிகள் மீன் வியாபாரிகள், ஆட்டிறைச்சி வியாபாரிகள், சிக்கன் கறிக்கடை வியாபாரிகள், பீப் கறி கடை வியாபாரிகள், அனைவரையும் அழைத்து பேசப்பட்டது, அப்போது வியாபாரிகளே முன் வந்து மக்கள் நலனுக்காக ஊரடங்கு உத்தரவு இருக்கும் வரை நாங்கள் கறிகடை திறக்க மாட்டோம் என அனைவரும் உறுதி அளித்தனர் அப்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரவேஷ் குமார் மற்றும் வேலூர் மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி மாநகர சுகாதார நல அலுவலர் மணிவண்ணன் மற்றும் இரண்டாம் மண்டல சுகாதார அலுவலர் சிவகுமார் உடன் இருந்தனர் .