விருத்தாசலத்தில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரி தற்காலிகமாக போடப்பட்டுள்ள காய்கறி மார்க்கெட்டில் மற்றும் அம்மா உணவகம் ஆய்வு:
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில்
கொரோனா வைரஸ் தடுப்பதற்காக தமிழக அரசு கடந்த 24 ஆம் தேதி மாலை ஊரடங்கு உத்தரவு போடப்பட்டது வரும் 14ம் தேதி வரை இந்த நிலையில் கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் மளிகை கடை, காய்கறி கடை, மருந்து ஆகிய கடைகள் மட்டும் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டது அதன்பேரில் விருத்தாசலத்தில் காய்கறி மார்க்கெட் தற்காலிகமாக விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் துவக்கப்பட்டது இதில் காய்கறி வியாபாரிகள் அதிகமான விலையில் பொருட்கள் விற்பனை செய்வதாக கடலூர் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிக்கு தகவல் வந்தது அதன் பேரில் இன்று விருத்தாசலத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் இயங்கிய காய்கறி மார்க்கெட் ஆய்வு செய்தபோது அதிக விலைக்கு விற்பனை செய்தனர் இதனை அறிந்த உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அவர்களை எச்சரித்து இனிமேல் அதிக விலைக்கு விற்கக்கூடாது என்று கூறிச் சென்றார்.
மேலூம் பாலக்கரையில் உள்ள அம்மா உணவகத்தை ஆய்வு செய்தார் அங்குள்ள பெண்களுக்கு முக கவசத்தை போட சொன்னார்.